எச். ராஜாவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 27, 2017 10:24 ISTபொழுதுபோக்கு
தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்திருப்பவர் விஜய். தற்பொழுது விஜய் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் சர்ச்சைகளை சந்தித்த பிறகே திரையிட படுகிறது. இவர் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி, தலைவா, கத்தி போன்ற படங்கள் சர்ச்சைக்கு பிறகே வெளியிடப்பட்டன. இந்நிலையிலும் விஜய் ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பினை கொடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்திற்கும் மிக பெரிய அளவில் பா.ஜ.க கட்சியின் நிர்வாகிகளான எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சர்ச்சைகளை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையிலும் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் மாபெரும் வெற்றியை பெற்றது.
விஜய்யின் படத்தை சர்ச்சைக்கு உள்ளாகிய H.ராஜா அதில் வெற்றி அடையாததால் இதனை அடுத்து விஜய்யின் தந்தை சந்திரசேகர் பேசிய ஒரு வீடியோவுடன் பின்வருமாறு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ. நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா?ரசிகர் மன்றம் கலைப்போம் இந்துவாக இணைவோம்.
மகன் சினிமாவில் புதிதாக கோவில் காட்டாதே என்பார். தந்தை ஏற்கெனவே உள்ள கோவிலில் செலுத்தும் காணிக்கையை லஞ்சம் என்பார். இந்துவே இந்த மதமாற்ற குடும்பத்தின் திட்டமிட்ட சதியை புரிந்துகொள்.
இதன் காரணத்தினால் விஜயின் நற்பணி மன்றத்தில் இருந்து 60 நபர்கள் பா.ஜ.க- வில் இணைந்துள்ளனர், இது தளபதி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.