Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது 'என்ஜிகே (NGK)' படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரில் ஒரு கமாண்டோவாகவும், சமூக போராளியாகவும் சூர்யா தோற்றமளித்தார்.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 37 வது படத்திற்கு இயக்குனர் கேவி ஆனந்தத்துடன் இணைந்துள்ளார். இதன் மூலம் இவர்களது கூட்டணி அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக வெளிவந்த சூர்யாவின் அயன், மாற்றான் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதன் மூலம் இயக்குனர் கேவி ஆனந்த், நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய மூவரும் மூன்றாவது முறையாக சூர்யா 37 படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார். விரைவில் படக்குழு அடுத்தகட்ட அறிவிப்பை அறிவிக்க உள்ளது.

சூர்யா 37 படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்