Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் இசை

imaikka nodigal audio teaser

இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுத்து, இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ஹிந்தி திரையுலகில் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப் நடித்துள்ளார். மேலும் இவர் முதன் முதலாக தமிழ் திரையுலகிற்கு இப்படத்தின் மூலம் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் இப்படத்தினை தயாரிக்கிறார்.  

'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இரண்டாவது முறையாக இணையும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த மாதத்தில் வெளிவரவுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்றதினை தொடர்ந்து படத்தின் இசையை விரைவில் வெளியிட இருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.    

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் இசை