Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சீம ராஜா மூலம் பாடகராக அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் சாம்பியன்

சூப்பர் சிங்கர் வெற்றியாளராக செந்தில் கணேஷை திரைத்துறைக்கு சீம ராஜா படத்தின் மூலம் அறிமுகப்படுத்த உள்ளதாக இமான் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 6 இறுதி போட்டி கடந்த ஞாயிற்று கிழமை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் மக்களின் பேராதரவை பெற்று வந்த பாடகர் செந்தில் கணேஷ் தாண்டவக்கோணி பாடல் மூலம் சூப்பர் சிங்கர் 6 சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். சாம்பியன் பட்டத்தை வென்றதாக இவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடும், ஏஆர் ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பாடகர் செந்தில் கணேஷை 'சீம ராஜா' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார். தன்னுடைய படத்தின் மூலம் இமான் புதுப்புது இசை கலைஞர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்துவார். அந்த வகையில் தற்போது செந்தில் கணேஷையும் திரைத்துறைக்கு சீம ராஜா படத்தின் மூலம் அறிமுக படுத்தவுள்ளார்.

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள சீம ராஜா படத்தில் யுகபாரதி பாடல் வரிகளில் செந்தில் கணேஷ் தனது குரலை பதிவு செய்ய உள்ளார். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் விநாயகர்சதுர்த்தியில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு தேதியினை வரும் ஜூலை 20 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

சீம ராஜா மூலம் பாடகராக அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் சாம்பியன்