Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வாரேன் வாரேன் சீம ராஜா லிரிக் விடியோவை வெளியிடும் இமான்

சீம ராஜா படத்தின் வாரேன் வாரேன் சீம ராஜா என்ற பாடலின் லிரிக் வீடியோ ஒன்றை இசையமைப்பாளர் இமான் நாளை வெளியிட உள்ளார்.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'ரஜினி முருகன்' படத்திற்கு பிறகு உருவாகியுள்ள படம் 'சீம ராஜா'. பொன்ராமின் இரண்டு படங்களிலும் நாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். தன்னுடைய இரண்டு படங்களில் புது நாயகிகளை பிரபலப்படுத்தி வந்த பொன்ராம் இந்த படத்தில் சற்று மாறுதலாக முன்னணி நடிகையான சமந்தாவை நடிக்க வைத்துள்ளார்.

காமெடிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த படம் என்பதால் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் பரோட்டா சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். இவருடன் யோகி பாபு மற்றும் மனோபாலாவும் காமெடிக்கு பலம் சேர்க்கும் விதமாக இணைந்துள்ளனர். இது தவிர நடிகர் நெப்போலியன், சிம்ரன், அபூபக்கர் மற்றும் பிரபல இயக்குனரான கேஎஸ் ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக பொன்ராமின் இரண்டு படங்களுக்கு இசையமைத்துள்ள டி இமான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள 'வாரேன் வாரேன் சீம ராஜா' என்ற பாடலின் சிங்கிள் வீடியோ ஒன்றை இமான் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வேலைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தினையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்டி ராஜா தயாரித்துள்ளார்.

வாரேன் வாரேன் சீம ராஜா லிரிக் விடியோவை வெளியிடும் இமான்