Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷாலின் 'இரும்புத்திரை' படப்பிடிப்பு நிறைவு

irumbu thirai movie shooting

புது முக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரிக்கிறார். இந்த படம் ஜனவரி 26-இல் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது. 

நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீடு ஜனவரி 6-இல் மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திரவிழாவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் 300 கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

விஷாலின் 'இரும்புத்திரை' படப்பிடிப்பு நிறைவு