Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரும்புத்திரை படத்தின் யார் இவன் சிங்கிள் ட்ராக்

irumbu thirai movie yaar ivan single track official

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தற்பொழுது நடித்து வரும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். விஷாலுக்கு சொந்தமான 'விஷால் பிலிம் பேக்டரி' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விஷால் தயாரித்து வரும் இப்படத்தில் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் 'ஆக்சன் கிங்' அர்ஜுன் நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் போன்றவர் நடித்துள்ளனர்  

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியிட உள்ளனர். 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளிவரஉள்ள இப்படத்தில் ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஈடுபட ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொண்டுள்ளார். படத்தின் போஸ்டர், டீசர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்புகளையும்அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டை மலேசியாவில் நடைபெற உள்ளநட்சத்திர விழாவில் வெளியிட இருக்கும் இந்நிலையில் படத்தின் 'யார் இவன்' என்ற சிங்கிள் டிராக்கை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது 

இரும்புத்திரை படத்தின் யார் இவன் சிங்கிள் ட்ராக்