Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நட்சத்திர விழாவில் இரட்டை விருந்தளிக்கும் விஷால்

vishal movies surprise in natchathira vizha 2018

நடிகர் விஷால் (விஷால் கிருஷ்ண ரெட்டி) தமிழ் திரைப்பட நடிகரான இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவருடைய தந்தை தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்குகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் நடிப்பதற்கு குடும்பத்தினர் மற்றும் பேராசிரியர் ராஜநாயகம் ஆலோசனைகளாலும் திரையுலகிற்கு வந்துள்ளார். இவர் ஆக்சன் கிங் அர்ஜூனுடன் இணைந்து வேதம், ஏழுமலை போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 

இதனை அடுத்து இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு வெளிவந்த 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் 2005-இல் வெளிவந்த 'சண்டக்கோழி' படம் மூலம் ஆக்சன் ஹீரோவாக மக்கள் மத்தியில் தற்போது வரை பேசப்பட்டு வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, சத்யம், தோரணை, அவன் - இவன், பாண்டிய நாடு போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் 'அவன் - இவன்' படத்தில் இவரது நடிப்பு திறமை இன்றளவும் பேசும் படமாக அமைந்தது. 

இவர் தற்போது புதுமுக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' படத்திலும், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக 'இரும்புத்திரை' படத்தின் இசையை மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர விழாவில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி 2' படத்தின் டீசரையும் நட்சத்திர விழாவில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நட்சத்திர விழாவில் இரட்டை விருந்தளிக்கும் விஷால்