Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யாவின் 36வது படத்தில் வில்லனாக இணையும் பிரபலம்

jagabati babu joins suriya 36 film

சூர்யா நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தனது 36வது படத்தினை உருவாக்கவுள்ளார். முதல் முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை வருகிற பிப்ரவரி மாதம் மூன்றாம் வாரத்தில் தஞ்சாவூர் பகுதியை சுற்றி படப்பிடிப்பு துவங்க இருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக 'ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்து வரும் இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.     

 யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்தினை 2018ம் ஆண்டின் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்கவுள்ளனர். இந்நிலையில் படத்தின் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில்  ஜெகபதி பாபு நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் தமிழில் தாண்டவம், பைரவா, லிங்கா போன்ற வெற்றி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறார். இவர் 120ம் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வில்லன் மற்றும் சிறந்த துணை நடிகருக்காக 3 பிலிம் பேர் விருது, 7 நந்தி விருது, 3 சீமா விருது மற்றும் Asianet பிலிம் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.        

    

சூர்யாவின் 36வது படத்தில் வில்லனாக இணையும் பிரபலம்