Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்

director raju murugan speech about tamil nadu government and cavery verdict

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஜிப்ஸி' படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் ராஜு முருகன் கோவையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

அதில் "குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து என்னுடைய அடுத்த படமான 'ஜிப்ஸி' படம் வழக்கமான படமாக இல்லாமல் மக்களுக்கான சமூகம் சார்ந்த நல்ல அரசியல் படமாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை சாதி என்பது தீவிரவாதத்தை விட மோசமாகி உள்ளது. ஒவ்வொரு சாதி மத கொலைகளுக்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது.

தமிழக அரசு செயலிழந்து பலவீனமாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் தான் தலையோங்கி உள்ளது. இங்கு யாரும் மக்களை காப்பாற்ற, மக்களுக்காக அரசு அதிகாரி வேலைக்கு செல்வதில்லை. அவர்கள் வயிற்றை நிரப்ப மட்டுமே செல்கின்றனர். இன்றைய உலகில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இப்படி தான் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் சாதாரண மக்கள் ஜோக்கர்களாக தான் பார்க்கப்படுகிறார்கள். காவிரியின் தீர்ப்பிற்கு பிறகு தமிழகத்தின் நிலை என்னவென்று அனைத்து மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்த நிலைக்கு முறையான ஆளுமை திறன் இல்லாததே காரணம். இதனை கட்டுப்படுத்த காமராசர், பெரியார், அம்பேத்கார் ஆகியோரை மாணவர்களின் மத்தியில் கொண்டு வரவேண்டும்." என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் சாதாரண மக்கள் தான் ஜோக்கர்களாக தெரிகின்றனர்