Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜோதிகா மற்றும் ராதாமோகன் இணைந்துள்ள புதுப்பட தலைப்பு அறிவிப்பு

நாச்சியார் படத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கு காற்றின் மொழி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான ராதாமோகன், அழகிய தீயே, பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம் போன்ற 8 படங்களை இயக்கியுள்ளார். இதில் மொழி, அபியும் நானும் போன்ற படங்கள் சிறந்த இயக்குனருக்கான பெருமையை தேடி தந்தது. இவருடைய இயக்கத்தில் 2007இல் வெளியான மொழி படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

இந்த படம் ஜோதிகாவின் 35வது படமாக வெளியானது. இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதும் ஜோதிகாவுக்கு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு ஜோதிகா மற்றும் இயக்குனர் ராதா மோகன் ஆகியோர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு தற்போது இணைந்துள்ளனர். இந்த படம் இந்தியில் நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான 'தும்ஹரி சுலு' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக உள்ளது. தற்போது இந்த படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை ஜோதிகாவுடன் நடிகர் விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு 'காற்றின் மொழி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பு குறித்து சமீபத்தில் புதிர் ஒன்றை படக்குழு அறிவித்திருந்தது. இரண்டு வார்த்தைகள் கொண்ட இந்த தலைப்பில் ஒரு வார்த்தை ரேடியோவை சார்ந்தது மற்றொரு வார்த்தை ஜோதிகா மற்றும் இயக்குனர் ராதா மோகனை சார்ந்தது என்று தெரிவித்திருந்தது.

இதன்படி இன்று வெளியான 'காற்றின் மொழி' என்ற தலைப்பில் காற்று - ரேடியோவை சார்ந்தது, மொழி - இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம். இந்த படத்தை போப்ட்டா மீடியா வொர்க்ஸ் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன், எஸ் விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். தற்போது தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஜோதிகா மற்றும் ராதாமோகன் இணைந்துள்ள புதுப்பட தலைப்பு அறிவிப்பு