பிரியா விடையை கொண்டாடும் கலகலப்பு 2 படக்குழு
ராசு (Author) Published Date : Dec 05, 2017 12:40 ISTபொழுதுபோக்கு
சுந்தர்.சி இயக்கத்தில் அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சித்தர்.சி தயாரித்து வரும் 'கலகலப்பு 2' படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, மிர்ச்சி சிவா, மனோபாலா, சதீஸ், யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, வையாபுரி, ராதாரவி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி காரைக்குடியில் தொடர்ந்தது. அதன் பின்னர் காசி, இந்தூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றது.
படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் டிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் நிறைவடைந்து விடுவதாக படக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஷி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு ட்விட்டரில் பதிவு செய்ததோடு, பிரியா விடையை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.