Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெளியானது உலக நாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர்

கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 ட்ரைலரை ஸ்ருதி ஹாசன் தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் நீண்ட காலங்களாக தாமதமாகி, ஒரு வழியாக விரைவில் வெளியாகவுள்ள படம் 'விஸ்வரூபம் 2'. 2013இல் வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. முந்தைய பாகத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் கிப்ரான் இசையமைப்பில் கமல் ஹாசனின் எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகஉள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலரையும் கமல் ஹாசன் மகளான ஸ்ருதி ஹாசன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில் கமல் 'எந்த மதத்தையும் சாராதது தப்பில்லை பிரதர், தேச துரோகியாக இருக்க கூடாது' என்ற வசனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக விஸ்வநாதன் கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளார். ஆக்சன் கலந்து அதிரடி படமான இந்த படத்திற்கு ஜிப்ரான் முதல் பாகத்தின் பிஜிஎமில் சிறு மாற்றங்களை செய்துள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ரோகித் செட்டி பிக்ச்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 

வெளியானது உலக நாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர்