Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உலகநாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர் விரைவில்

காலா படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ள நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் டீசரையும் விரைவில் கமல் தனது உலகநாயகன் யுடியூப் சேனலில் வெளியிட உள்ளதாக தற்போது படக்குழு தெரிவித்துள்ளது, Image Credit - @ikamalhaasan (Facebook)

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை நடிகர் கமல் ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்தும் வருகிறார். இந்த படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் 2013-ஆம் ஆண்டே நிறைவடைந்தது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக தாமதமான இந்த படத்தின் தயாரிப்பாளர் உரிமையை கமல் ஹாசன் வாங்கி தயாரிக்க ஆரம்பித்தார்.

இதன் பிறகு கடந்த ஆண்டில் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் மீதமுள்ள படப்பிடிப்பை கமல் ஹாசன் நிறைவு செய்தார். முன்னதாக  அடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆண்டு மே மாதத்தில் படக்குழு வெளியிட்டது. பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாக இந்த படத்தின் ட்ரைலர் இப்போ வரும் அப்போ வரும் என்று சமூக வலைத்தளத்தில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில் கமல் ஹாசன் அரசியலில் இறங்க ஆரம்பித்தார். ஒரு புறம் அரசியல் மறு புறம் 'விஸ்வரூபம் 2' பட வேலைகள் என பிஸியாகவே இருந்தார். இதனை தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தின் பணிகளையும் இயக்குனர் சங்கர் ஆரம்பித்தார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' படம் வரும் ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.

இதனால் காலா படத்துடன் ஏப்ரல் 27-ஆம் தேதி 'விஸ்வரூபம் 2' படம் மோதவுள்ளதாக தற்போது தகவல் வெளிவருகிறது. 'காலா' படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ள நிலையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டீசரையும் விரைவில் கமல் தனது உலகநாயகன் யுடியூப் சேனலில் வெளியிட உள்ளதாக தற்போது படக்குழு தெரிவித்துள்ளது.

உலகநாயகனின் விஸ்வரூபம் 2 ட்ரைலர் விரைவில்