Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் ஸ்டாரின் புது படத்தில் இணைந்த அனிருத்

சூப்பர் ஸ்டாரின் புது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித்தின் 'காலா' மற்றும் இயக்குனர் சங்கரின் '2.0' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் காலா படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவரின் அடுத்த படத்தை இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார்.

இவர் முன்னதாக பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கி உள்ளார்.  இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத் முதல் முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளார். இவருடைய இசையமைப்பில் இறுதியாக வேலைக்காரன், அஞ்ஞாதவாசி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள புது படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்க்க படுகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பிட்சா, இறைவி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் ஜிகர்தண்டா படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். 

சூப்பர் ஸ்டாரின் புது படத்தில் இணைந்த அனிருத்