Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கரு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்

karu movie release date

மலையாள திரையுலகில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற படம் ப்ரேமம். இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்கள் கவரும் வகையில் இருந்தால் அவருக்கு பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில்  ஏ.எல்.விஜய் இயக்கி வரும் 'கரு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சௌரியா, ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைக்கா புரொடெக்சன் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலரை நடிகர் பிரபு தேவா சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி 'கரு' படத்தினை வெளியிடப்படுவதாக ட்விட்டர் மூலம் தகவலை வெளியிட்டுள்ளது.  

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 'கரு' படத்தினை தொடர்ந்து சாய் பல்லவி 'மாரி 2' படத்தில் துனுஷுக்கு ஜோடியா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் சில நாட்களில் துவங்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.   

கரு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்