Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திர வில்லனாக மலையாள நடிகர் விநாயகன்

சீயான் விக்ரம் பிறந்த நாளில் துருவ நட்சத்திரம் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை தமிழ் திரையுலகில் கையாண்டு வரும் சீயான் விக்ரமின் 51வது பிறந்த நாள் விழா ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளான இன்று அவருக்கு, ஏராளமான சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருடைய நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர் மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து மஹாவீர் கர்ணா என்ற சரித்திர படத்திலும் நடிக்க உள்ளார். இவருடைய பிறந்த நாளில் சாமி 2 படக்குழு புது போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கதாபத்திரத்திற்கான தகவலை வெளிவந்துள்ளது. விக்ரம் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 5 வருடங்களாக 'துருவ நட்சத்திரம்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் 12 முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக தாமதமாகி கொண்டு வரும் இந்த படத்தின் டீசர் வெளியானத்திலிருந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் ஒருவராக மலையாள முன்னணி நடிகரான விநாயகன் நடித்து வருவதாக அறிவித்துள்ளது. இவர் மலையாளத்தில் 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது மோகன்லாலின் 'ஓடியன்' மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் உருவாகி வருகிறது.  

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திர வில்லனாக மலையாள நடிகர் விநாயகன்