Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மன்னர் வகையறா அண்ணன பத்தி கவல இல்ல பாடல் வெளியீடு

mannar vagaiyara movie annana pathi kavalai illa song released

இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில், அரசு ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் என் விமல் தயாரித்துள்ள படம்  'மன்னர் வகையறா'. இந்த படத்தில் அதிரடியில் களமிறங்கியுள்ள விமலுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, சாந்தினி தமிழரசன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி போன்ற திரைப்பட வட்டாரங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஒரு சிறிய காட்சியில் பிக் பாஸ் ஜூலி நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் ஈடுபட்டிருக்கிறார். முன்னதாக வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி படத்தின் டீசரை வெளியிட்டனர். அதில் விமலின் காதல், நகைசுவை, அதிரவைக்கும் சண்டை காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று படத்தில் பணியாற்றியது குறித்து சுவாரஸ்யமாக உரையாடினார். மேலும் இந்த விழாவில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் 'அண்ணன பத்தி கவல இல்ல' பாடலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படம் குடியரசு தின விழாவில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.   

மன்னர் வகையறா அண்ணன பத்தி கவல இல்ல பாடல் வெளியீடு