Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விமலின் 'மன்னர் வகையறா' டீசர்

mannar vahaiyara movie teaser

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மன்னர் வகையறா'. இந்த படத்தில் ‘கயல்’ ஆனந்தி, சாந்தினி தமிழரசன் என இரு நாயகிகள் களமிறங்கியுள்ளனர். அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தினை அரசு ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நடிகர் விமல் தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், யோகி பாபு, நீலிமா ராணி என திரைப்பட வட்டாரங்கள் இணைந்துள்ளனர். 

மேலும் இவர்களுடன் இணைந்து ஒரு சிறிய காட்சியில் நடிப்பதற்கு பிக் பாஸ் ஜூலியும் களமிறக்கியுள்ளார். இந்த படத்தில் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில் ஈடுபட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் விமலின் மிரளவைக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டீசரை வருகிற 25ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.          

விமலின் 'மன்னர் வகையறா' டீசர்