Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மீசையை முறுக்கு படத்தின் 150 மில்லியன் சாதனை விழா

meesaya murukku crosses 150 million streams

ஹிப் ஹாப் தமிழா ஆதி கடந்த ஜூலை மாதம் வெளியான 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயனாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதற்கு முன்னதாக இவரது இசையில் சில ஆல்பங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் ஏராளமான வரவேற்பு பெற்றது. இவரது இசையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 'ஆம்பள' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவருடைய இசையில் 'இன்று நேற்று நாளை', 'தனி ஒருவன்' போன்ற படங்கள் வெளியாகி திரையுலக வட்டாரங்களை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இவருடைய கதை, திரைக்கதை, இசை,  இயக்கத்தில் 'மீசையை முறுக்கு' படம் உருவானது. 

இந்த படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் சார்பில் சுந்தர் சி, குஷ்பூ தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஆதியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொண்டு காதல் கலந்த படமாக இயக்கியிருந்தார். தற்போதுள்ள சூழலுக்கேற்ப அனைவரும் பார்க்கக்கூடிய படமாக 'மீசையை முறுக்கு' அமைந்தது. இந்த படத்தில் இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 150 மில்லியனை கடந்துள்ளது. இந்த படத்தின் 150 மில்லியன் சாதனை விழா தற்போது நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு உரையாடினர்.

மீசையை முறுக்கு படத்தின் 150 மில்லியன் சாதனை விழா