Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரஜினிகாந்த் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த மேகா ஆகாஷ்

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷும் நடிக்க உள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்த படம் அனிருத் இசையமைப்பில் உருவாக உள்ளது.

மெர்குரி படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாரை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசைஅமைக்கவுள்ள இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகை மேகா ஆகாஷ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் தெலுங்கில் லீ என்ற படம் கடந்த ஆண்டில் வெளியானது. ஆனால் தமிழில் இவரது நடிப்பில் ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. ஆனால் இவருக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவருடைய நடிப்பில் தற்போது ஒரு பக்க கதை, எனை நோக்கி பாயும் தோட்டா, பூமராங் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடிக்க உள்ளனர். இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த படம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாங்கவுள்ள 165வது படமாகும். காலாவுக்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் இந்த படம் அரசியல் கதையாக உருவாக உள்ளதாம்.

ரஜினிகாந்த் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த மேகா ஆகாஷ்