Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஒரு கத சொல்லட்டா சார் - வெளியானது சிவாவின் தமிழ் படம் 2.0 டீசர்

பறவை முனியம்மாவுக்கு பிறகு இந்த படத்தின் வில்லனாக காமெடி நடிகர் சதிஷ் வில்லனாக 8 கெட்டப்புகளில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான சிஎஸ் அமுதன் இயக்கத்தில் கடந்த 2010இல் வெளியாகி இளைஞர்களின் பேராதரவை பெற்ற படம் 'தமிழ் படம்'. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை கலாய்க்கும் விதமாக உருவான இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் அரசியலையும் வறுத்தெடுக்க உள்ளனர். இந்த படத்தையும் இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்க மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மட்டும் வில்லனுக்காக 8 கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வரும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்து வருகிறார். இது தவிர இந்த படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக இந்த படத்தின் டீசரை இன்று வெளியிட உள்ளதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். அதன்படி இந்த படத்தின் டீசரை படக்குழு காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ளனர். டீசர் வெளியான ஒரு மணிநேரத்திற்குள் 20ஆயிரம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த டீசரில் துப்பாக்கி, மங்காத்தா, விவேகம், விக்ரம் வேதா, துப்பறிவாளன் போன்ற படங்களின் கெட்டப்புகளை உபயோகப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த டீசரில் 'சிவாவாகிய நான்' மற்றும் 'ஒரு கத சொல்லட்டா சார்' போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பறவை முனியம்மா நடித்திருந்தார். ஆனால் இந்த பாகத்தில் காமெடி நடிகரான சதிஷ் நடித்துள்ளார். வெளியான டீசரில் இவருடைய மங்காத்தா கெட்டப் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஒரு கத சொல்லட்டா சார் - வெளியானது சிவாவின் தமிழ் படம் 2.0 டீசர்