Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'மோகினி' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு தேதி

mohini new announcement

திரைத்துறையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை திரிஷா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது த்ரில்லர் படமான மோகினி, சதுரங்க வேட்டை 2 படங்களோடு சுந்தர் பாலு இயக்கத்தில் கர்ஜனை படத்திலும், 1818, ஹேய் ஜுடே, 96 போன்ற படங்களிலும் நடித்துவருகிறார். இயக்குனர் ரமணா மாதேஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'மோகினி'. இந்த படத்தை மார்வெல் ஒர்த் ப்ரொடக்சன் சார்பில் எல் லக்ஷ்மன்குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை திரிஷாவுடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்னணி நடித்துள்ளார். ஜிபி குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விவேக் -மர்வேன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முக்கிய தகவலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி இந்த படத்தின் ட்ரைலர் டிசம்பர் 21-இல் வெளியிடுவதாகவும் படத்தின் பாடல்களை ஜனவரி 12-இல் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

'மோகினி' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு தேதி