Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'

director ramprakash rayappa new movie

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் புதிய படத்திற்கு 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'போக்கிரி ராஜா' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'வெண்ணிலா கபடிக்குழு', 'நான்மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'ராஜபாட்டை', 'ஆதலால் காதல் செய்வீர்', 'பாண்டிய நாடு', 'ஜீவா', 'பாயும் புலி', 'மாவீரன் கிட்டு', 'நெஞ்சில் துணிவிருந்தால்' போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுசீந்திரன், 

அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன் போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் மிஸ்கின் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கல்பதகுரு பிக்ச்சர்ஸ் சார்பில் ராம்மோகன் தயாரிக்கிறார். இந்த படத்தின் துணை கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நாயகிகள் பற்றிய தகவல்கள் விரைவில் படக்குழு வெளியிடும் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மிஸ்கின், சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'