Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு

நயன்தாரா, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை நயன்தாரா, வேலைக்காரன், அறம் படங்களின் வெற்றிக்கு பிறகு கோலமாவு கோகிலா, விசுவாசம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 'டிமான்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாக நிறைவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான பணிகளை மும்முரமாக படக்குழு கவனித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வரும் ஜூன் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது. கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிஜே ஜெயக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.

அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக அனுராக் கிஷப் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ராசி கண்ணா, ரமேஷ் திலக், உதய் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா மனைவியாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ட்ரைலர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு