Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரசிகர்களுக்கு சூர்யா பிறந்த நாளில் என்ஜிகேவின் செம சர்ப்ரைஸ்

வரும் ஜூலை 22இல் சூர்யா பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடவுள்ள நிலையில் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பினை தெரிவித்துள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா, விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்து 'NGK' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா சமூக போராளியாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி என இரு நாயகிகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் இரண்டாவது போஸ்டரை சூர்யா பிறந்த நாளான ஜூலை 22இல் (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடுவதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு இறைவி, இறுதி சுற்று போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு அமைத்த சிவகுமார் விஜயன் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ள இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது. 

ரசிகர்களுக்கு சூர்யா பிறந்த நாளில் என்ஜிகேவின் செம சர்ப்ரைஸ்