Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் சிங்கிள் ட்ராக்

oru nalla naal paathu solren movie single track

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பல வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா, காயத்ரி சங்கர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் டீசரில் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஒரு வாசத்திற்கு பல விமர்சனங்களுக்கு உள்ளாகியது.    

புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட உள்ளனர். இதனால் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி முதல் முறையாக பல கெட்டப்புகளை கையாண்டுள்ள இப்படத்தினை  7சி என்டர்டைன்மெண்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்தில் இசையமைத்துள்ளார்.    

 இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை இன்று மாலை 5மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அதிகார பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணத்தினால் ரசிகர்கள் வெகுவான எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.   

 

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் சிங்கிள் ட்ராக்