ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ப்ரோமோ வீடியோ
ராசு (Author) Published Date : Jan 17, 2018 12:21 ISTபொழுதுபோக்கு
புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா, காயத்ரி சங்கர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் டீசரில் வெளிவந்த விஜய் சேதுபதியின் பல வித கெட்டப்புகள் ரசிகர்களிடம் வெகுவான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 7சி என்டர்டைன்மெண்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இவர் இசையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த சிங்கிள் ட்ராக் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் இசையை ஜனவரி 6-இல் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பிப்ரவரி 2-இல் உலகெங்கும் வெளியாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.