Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரபு தேவாவின் குலேபகாவலி இசை வெளியீடு

gulebagavali movie audio release

எஸ். கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் படத்தின் அனைத்து வித படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.  

இதற்கு அடுத்த படியாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் இசையை வெளியிடுவதாக தகவலில் வந்துள்ளது. படத்தின் 4 பாடல்களை நாளை வெளியிட உள்ளனர். இந்த தகவலின் படி அந்த நான்கு சுவாரிஸ்யமான நபர்கள் மற்றும் பாடலுக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில்  அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ஆர்எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவில் ஈடுபட  விவேக் மேர்வி இசையை மேற்கொண்டுள்ளார். 

 இதனை தொடர்ந்து பிரபு தேவா தமிழில் யங் மங் ஜங், மெர்குரி, லட்சுமி மற்றும்  ஹிந்தியில் காமோஷி போன்ற பல படங்களில் ஈடுபட்டு வருவதினை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. 

பிரபு தேவாவின் குலேபகாவலி இசை வெளியீடு