பிரபு தேவாவின் யங் மங் சங் இறுதிகட்ட படப்பிடிப்பு
மோகன்ராஜ் (Author) Published Date : Jan 12, 2018 12:10 ISTபொழுதுபோக்கு
ஏஎல். விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் கடந்த 2016ல் வெளிவந்த த்ரில்லர் படமான 'தேவி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தினை தொடர்ந்து பிரபு தேவா தற்பொழுது குலேபகாவலி, யங் மங் சங், சார்லின் சாப்ளின் 2, மெர்குரி, ஹிந்தியில் காமோஷி மற்றும் பெயரிடாத சில படங்களில் நடித்து வருகிறார். இதில் எம்.எஸ் அர்ஜுன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்து வரும் 'யங் மங் சங்' படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் 'கிங் ஆஃப் டான்ஸ்’பிரபு தேவா குங்ஃபூ பயிற்சி சொல்லி கொடுக்கும் மாஸ்டராக வளம் வருகிறார். இவருக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், களவாடிய பொழுதுகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தங்கர் பச்சான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி, ‘பாகுபலி’ பிரபாகர், ‘கும்கி’ அஸ்வின், சித்ரா லட்சுமணன், காளி வெங்கட் போன்றவர்கள் பேசத்தக்க கதாபாத்திரத்தில் இணைத்துள்ளனர்.
‘வாசன் விஷுவல் வென்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் – கே.எஸ்.சிவராமன் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அம்ரீஷ் இசையமைக்க ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட பாசில் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். தற்பொழுது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த படபிடிப்பில் பிரபாகர், தங்கர் பச்சான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஷெடியூலுடன் படத்தின் அனைத்து ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.