Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிம்புவால் பெரும் இழப்பை சந்தித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்

michael rayappan statement against simbu

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தோல்வியடைந்தது. இந்த படத்தை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இந்த படத்தால் நேர்ந்த சோகம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் நடக்க கூடாது என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் "சினிமா மீது எனக்கிருந்த ஆர்வத்தால் இதுவரை 12 படங்களை தயாரித்துள்ளேன். இதில் சில படங்கள் நன்றாக ஓடவில்லை என்றாலும் நம்மால் தொழிலாளர்கள் திருப்தி அடைகின்றனர் என்று நினைத்து எப்படியும் வெற்றியை அடைந்தே தீருவேன் என்ற வெறியில் படங்களை தயாரித்து வந்தேன். ஆனால் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு செல்லும் என்று நினைக்கவே இல்லை. 

இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் அவர்களிடம் கதையை கேட்டு இயக்குனரை என்னிடம் அனுப்பி வைத்தார். இந்த படம் திண்டுக்கல்லில் ஆரம்பித்து துபாய், சென்னை இறுதியாக காசியில் முடியும் என்பது அவருக்கே தெரியும். மே மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சினிமா துறையில் சிம்புவுடன் நடிக்க எந்த கதாநாயகியும் தயாராக இல்லை. பல கதாநாயகியிடம் பேசி இறுதியில் ஸ்ரேயா இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது அவர் ஒவ்வொரு இடத்தையும் மாற்றி கொண்டே இருப்பார்.  படப்பிடிப்பு தேதியை அவரே தேர்வு செய்வார். அவரே கால்சீட் நேரத்தையும் ஒதுக்குவார். ஆனால் கால்சீட் கொடுத்த நேரத்திற்கு ஒரு நாளும் வந்ததில்லை. மாயாஜாலில் படப்பிடிப்பு நடக்கும் போது இசிஆறில் ரூம் போட்டு தாங்கினார். அதன் கணக்கு விபரங்களை இராம நாராயணன் கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை படத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவேன் என்றார். அதனால் அவர் மாற்றப்பட்டார். 

மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை, ஒரு மணி நேரம் தாருங்கள் என்று இயக்குனர் கேட்டதால் அவர் வீட்டிலேயே நடத்தும்படி தெரிவித்தார். அவர் வீட்டில் நடக்கும் படப்பிடிப்பிற்கே 3 மணிக்கு தான் வந்தார், படப்பிடிப்பிற்கு தான் வரவில்லை, படத்தின் டப்பிங்கிற்காக வருவார் என்றால் அதற்கும் அவர் வரவில்லை. வெளியில் வரமாட்டேன் என்றதால் அவர் வீட்டிலேயே டப்பிங் செய்தார். இவர் குரலுக்காக 7500 ரூபாய் செலவில் வாய்ஸ் மாடுலேஷன் சாப்ட்வெர் உபயோகித்து சரி செய்தோம். இப்படி பல வழிகளில் நேர்ந்த தொல்லைகள், இடைஞ்சல்களால் படம் குளறுபடியாக வெளிவந்தது. இந்த படமும் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்தோம். எனக்கு ஏற்பட்ட கதி வேறு எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்படாமல் இருக்க கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்."

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகாருக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு "படம் தயாரிப்பில் இருக்கும்போது, அந்த படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும்போது, என் மீது யாராவது புகார் கொடுத்தால், அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு படத்தில் நடித்து முடித்து அது திரைக்கும் வந்த பிறகு என் மீது கொடுக்கப்படும் புகாருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் யாராக இருந்தாலும், அவர்களை பற்றி நான் தப்பாக பேச மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.

 

சிம்புவால் பெரும் இழப்பை சந்தித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்