மீண்டும் வரலாற்று சார்ந்த படத்தின் ராணா டகுபதி
ராதிகா (Author) Published Date : Jan 30, 2018 10:14 ISTபொழுதுபோக்கு
வரலாற்றை சேர்ந்த பாகுபலி 1&2 பாகங்களில் ராணா டகுபதி நடித்த பல்வாள்தேவனாய் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து மீண்டும் வரலாற்று சார்ந்த அரச குளத்து மார்த்தாண்ட வர்மர் மன்னரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராணா டகுபதி மார்த்தாண்ட வர்மர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
மார்த்தாண்ட வர்மர் (1706–1758) நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசாங்கத்தை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஆண்டுவந்தவர். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிறிய சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது. வலுவுள்ள படையொன்றைத் திரட்டிய மார்த்தாண்ட வர்மர் அயல் நாடுகளின் மீது படையெடுத்து அவற்றை வேணாட்டுடன் இணைத்துக் கொண்டார்.1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 'குளச்சல் போரில்' டச்சுக்காரர்கள் மீது போர்தொடுத்து அவர்களை தோல்வியைத் தழுவ செய்தார். அதன் பின்னர் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலைத் திருத்தி அமைத்த இவர்,தனது அரசை அங்குள்ள இறைவனுக்கே காணிக்கையாக்கி தன்னை ஸ்ரீபத்மநாபனின் அடியவனாகக் கருதி நாட்டை ஆண்டுவந்தார். இவர் 1758 ஆம் ஆண்டில் காலமானார்.
இவரது வரலாற்றை தற்பொழுது படமாக பிரபல மலையாள இயக்குனர் கே.மது இயக்கிவருகிறார். இவர் தமிழில் 'மௌனம் சம்மதம்' படத்தினை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்கிவரும் வரலாற்று சார்ந்த இப்படத்திற்கு ராபின் திருமலா ஸ்க்ரிப்டை எழுதிவருகிறார். அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா - த கிங் ஆஃப் திருவிதாங்கூர்' என்ற தலைப்பினை வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது கேரளாவில் நடைபெற்று வருகிறதாம்