Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தின் புது டீசர்

rangasthalam movie ramalakshmi introducing teaser

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராம் சரண் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'ரங்கஸ்தலம்'. இந்த படத்தை ஆர்யா, ஆர்யா 2 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். தற்போது முதன் முறையாக நடிகர் ராம் சரனுடன் 'ரங்கஸ்தலம்' படத்தில் இணைந்துள்ளார். இந்த படம் 1985-கால கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அடிப்டையாக கொண்டு உருவாகி வருகிறது. கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் ராம் சரண் 'சிட்டி பாபு' கதாபாத்திரத்திலும், நடிகை சமந்தா 'ராம லட்சுமி' கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது சமந்தாவின் 'ராம லட்சுமி' கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக இந்த படத்தின் புது டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை இயக்குனர் சுகுமார் மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை அனசூயா பரத்வாஜ், ராம் சரணின் தங்கை கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முழுக்க கிராமத்து சூழலில் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் பாடலை வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட உள்ளது.

ராம் சரணின் ரங்கஸ்தலம் படத்தின் புது டீசர்