Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரிச்சி படத்தின் பாடல் பதிவில் புது வித முயற்சி

richie movie in puliattam

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ரிச்சி படத்தில் ரவ்டி கேரக்டரில் ஹீரோவாக நடித்ததுள்ள நிவின் பாலியின் தமிழின் முதல் நேரடி படமாகும். இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ஜி.கே.ரெட்டி, முருகதாஸ், ராஜ்பரத், துளசி, இளங்கோ குமரவேல் உட்பட பலர் விறுவிறுப்பான வேடத்தில் நடித்துள்ளனர். 

ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்ணூர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். இவர் 'குரங்கு பொம்மை’ படத்திற்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டின் போது  இசை அமைப்பாளர் அஜனீஷ் லோகநாத் பின்வருமாறு பேசியுள்ளார். 

இந்த படத்தில் தமிழ் நாட்டின் கலாச்சாரமான புலியாட்டத்தை மையமாக வைத்து ஒரு பாடல்  இடம் பெற்றிருப்பதாகவும், இந்த பாடலை வித்தியாசமான முறையில் பதிவு செய்ததாகவும் கூறினார். மேலும் பாடல்கள் என்றால்  பொதுவாக ஸ்டுடியோவில் பதிவு செய்யப்படும். ஆனால் இந்த பாடல் ஆற்காட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு புலியாட்ட கலைஞர்கள் கொண்டு ஊர்களின் வெட்ட வெளியில் பதிவு செய்யப்பட்டு படமாக்கியுள்ளோம் என்று கூறினார்.   

ரிச்சி படத்தின் பாடல் பதிவில் புது வித முயற்சி