Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மாஸ்டர் ஷோபியின் நடனத்தில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்கார் பாடல் காட்சிகள்

சர்கார் படத்தின் பாடல் காட்சிகள் மாஸ்டர் ஷோபியின் நடன இயக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மக்களுக்காக அரசியல் வாதியையும், தனியார் நிறுவனத்தையும் எதிர்த்து போராடும் நாயகனாக விஜய் நடித்து வருகிறார். முன்னதாக சென்னையில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் சில முக்கிய காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்காக அமேரிக்கா சென்றுள்ள சர்கார் படக்குழுவில் வரலட்சுமியும் இணைந்துள்ளார். தற்போது ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள ஸ்டைலிஷான பாடல் காட்சி லாஸ் வெகாஸில் நடைபெற்று வருகிறது. இந்த பாடல் காட்சியில் வரலட்சுமியும் இணைந்துள்ளார். இந்த பாடலுக்கு மாஸ்டர் ஷோபி நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இவர் முன்னதாக விஜயின் 'கத்தி' படத்தில் 'பக்கம் வந்து முத்தம் தா' பாடலுக்கு விஜய் மற்றும் இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் பணிபுரிந்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜயுடன் 'சர்கார்' படத்தில் இணைந்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர்களுடன் வரலட்சுமி, பிரேம்குமார், யோகி பாபு, ராதா ரவி, பாலா கருப்பையா ஆகியோர் நடித்து வருகின்றனர். 

மாஸ்டர் ஷோபியின் நடனத்தில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்கார் பாடல் காட்சிகள்