Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சவரக்கத்தி 20 நொடி புது பாடல் ப்ரோமோ

savarakathi new promo video release

இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த ஜி.ஆர்.ஆதித்யா இயக்கிவரும் படம் சவரக்கத்தி. இந்த படத்தில் இயக்குனர்கள் மிஷ்கின் - ராம், பூர்ணா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த நாட்களில் வெளிவந்த போஸ்டர், இரண்டு டீசர்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தங்கக்கத்தி எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை பார்க்கும் போது இயக்குனர் மிஸ்கின் லோக்கல் ரவுடி கெட்டப்பை கையாண்டிருப்பதும் ராம் பார்பர் ஷாபில் ( முடிதிருத்தும் கடை ) பணிபுரிந்து வரும் தொழிலாளியாக தெரிகிறது. மேலும் ராமின் நடிப்பிப்பு தங்க மீன்களில் இருந்ததை விட மாறுபட்ட கதாபாத்திரத்தை மேற்கொண்டுள்ளார். இவருக்கு ஜோடியாக பூர்ணா சிறப்பாக நடித்துள்ளார். இந்த டீசரில் வெளிவந்த பூர்ணாவின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் இருந்து வெகுவான பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது.

மேலும் லோக்கல் ரவுடியான மிஷ்கின் மற்றும் ராம் இவர்களுக்கிடையில் சண்டை தகராறு ஏற்படுகிறது. இந்த சண்டை காட்சியின் இறுதியில் நாயகி பூர்ணாவை மிஸ்கின் கடத்தி செல்வது  போன்ற ஒரு காட்சியை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கிடையில் சண்டை காட்சி எப்படி வருகிறது,  இந்த சண்டையில் மிஸ்கின் கையளவிரும் சில அதிரடி காட்சிகள் அதிகளவு இடம் பெற்று ரசிகர்களுக்கிடையில் விறுவிறுப்பை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது படக்குழு 20 நொடி பாடல் டீசரை  வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் பூர்ணாவை கடத்தி செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பது குறிப்பிட்ட தக்கது. மேலும் இப்படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.    

 

சவரக்கத்தி 20 நொடி புது பாடல் ப்ரோமோ