Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அதர்வாவின் செம போதை ஆகாத படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் செம போத ஆகாத. இந்த படம் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வளர்ந்து வரும் இளம் நடிகருள் ஒருவரான அதர்வா நடிப்பில் தற்போது, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் 'செம போத ஆகாத', இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'இமைக்கா நொடிகள்', 'டார்லிங்' படத்தை இயக்கிய ஆர் கண்ணன் இயக்கத்தில் 'பூமராங்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செம போத ஆகாத' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவை வெளியானது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை மிஸ்டி, அனைகா சோடி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பாலிவுட் நடிகையான மிஸ்டிக்கு தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாகும். மேலும் இந்த படத்தின் மூலம் அனைகா சோடி நாயகியாக அறிமுகமாகிறார்.

முன்னதாக இவர் தமிழில் 'காவிய தலைவன்' படத்தில் ராணி ரங்கம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படம் 'பாணா காத்தாடி' படத்திற்கு பிறகு அதர்வாவுடன் இணையும் இரண்டாவது படமாகும்.

இந்த படத்தை நடிகர் அதர்வா தனது கிக்ஆஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதர்வாவின் செம போதை ஆகாத படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு