Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்

ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய இளமையாக மாற்றி கார்த்திக் சுப்பராஜ் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன், நவாசுதீன் சித்திக் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலா படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படமான '2.0' வரும் நவம்பர் மாதத்தில் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. நீண்ட காலமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக தாமதமாகி கொண்டு வந்த இந்த படத்தின் வெளியீடு தேதியினை சமீபத்தில் இயக்குனர் சங்கர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக, விடுதி பாதுகாவலராக நடித்து வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. ரஜினியுடன் இணைந்து முதன் முறையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் நயன்தாரவுக்கு பதிலாக சிம்ரன் நடிப்பதாக இருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த வாய்ப்பு பறிபோக தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு கிடைத்துளளது. மேலும் பிரபல இந்தி நடிகரான நவாசுதீன் சித்திக் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாகவும், நவாசுதீன் சித்திக் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 

ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்