Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

விக்ராந்த், சுசீந்திரன், மிஸ்கின் நடிப்பில் உருவாகிவரும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா போன்ற படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'. இந்த படத்தில் முன்னணி இயக்குனர்களான மிஸ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதுவரை இயக்குனராக திரையுலகை கலக்கி வந்த இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் மிஸ்கின் காவல் துறை அதிகாரியாகவும், சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகவும் நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வரும் இந்த படத்தை கல்பதரு பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிகே ராம் மோகன் தயாரித்து வருகிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இசை மற்றும் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்