Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மக்கள் இசை கலைஞன் செந்தில் கணேஷ் குரலில் அமையும் சூர்யா 37 ஓப்பனிங் பாடல்

கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 37 படத்தின் ஓப்பனிங் பாடலை சூப்பர் சிங்கர் சாம்பியன் செந்தில் கணேஷ் பாடியுள்ளார்.

என்ஜிகே படத்திற்கு பிறகு நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா இயக்குனர் கேவி ஆனந்துடன் அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். தற்போது இவருடைய இசையமைப்பில் 'சூர்யா 37' படத்தின் ஓப்பனிங் பாடலை மக்கள் இசை கலைஞன் மற்றும் சூப்பர் சிங்கர் சாம்பியனான செந்தில் கணேஷ் பாடியுள்ளார்.

சூப்பர் சிங்கரின் வெற்றிக்கு பிறகு செந்தில் கணேசுக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பிறகு டி இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயனின் 'சீம ராஜா' படத்திலும் தனது குரலை பதிவு செய்துள்ளார். கிராமத்து பாடகரான செந்தில் கணேஷ் தனது கிராமத்து கலையை அழிய விடக்கூடாது என்ற முயற்சியில் சூப்பர் சிங்கர் மேடை மூலம் ஏராளமான மக்களின் மனதில் தனது கலையின் அருமையை பதிய வைத்தார்.

திறமையானவர்களுக்கு நேரம் தாமதமானாலும் வாய்ப்புகள் தேடி வரும் என்பதற்கேற்ப, தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஏஆர் ரஹ்மான், டி இமான் இவர்களுக்கு பிறகு தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் தனது பாடலை பாடியுள்ளார். செந்தில் கணேஷ் குரலில் 'சூர்யா 37' படத்தின் ஓப்பனிங் பாடல் அமைவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சாகல், போமன் இராணி, சமுத்திரக்கனி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'NGK - நந்த கோபால குமரன்' படத்தில் சூர்யா பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மக்கள் இசை கலைஞன் செந்தில் கணேஷ் குரலில் அமையும் சூர்யா 37 ஓப்பனிங் பாடல்