Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மார்ச் 10இல் சூப்பர் ஸ்டாரின் காலா டீசர்

Super Star Rajinikanth Kaala movie teaser releasaed on March 10th

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'காலா'. 'காலா' என்பதற்கு 'எமன்' என்ற பொருள் உண்டு. இந்த படத்தில் ரஜினிகாந்த் காலா என்கிற கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஈஸ்வரி குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக இந்த படத்தின் போஸ்டர் மற்றும் வெளியீடு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது. குடும்ப சென்டிமென்ட் கதையில் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

'கபாலி' படத்தை தொடர்ந்து 'காலா' படத்திலும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் இந்த படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இ

ந்த படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா, ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி என பல திரைவட்டாரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மார்ச் 10இல் சூப்பர் ஸ்டாரின் காலா டீசர்