Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காயம்குளம் கொச்சுண்ணியில் இணைந்த மோகன்லால்

mohanlal plays cast of kayamkulam kochunni movie

'ரிச்சி' படத்தினை தொடர்ந்து மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தற்பொழுது வரலாற்று சார்ந்த 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தில் நடித்து வருகிறார். '36 வயதினிலே' படத்தை இயக்கிய இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில், 19-ஆம் நூற்றாண்டில் காயம்குளம் பகுதியில் வாழ்ந்த கொச்சுண்ணி என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கொச்சின்னியாக நிவின் பாலி நடித்து வருகிறார். ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக அமலாபால் நடிப்பதாக முன்பு தகவல் வெளிவந்தது. 

அதன் பிறகு நடிகை பிரியா ஆனந்த் அவருக்கு பதிலாக நடப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் கொச்சுண்ணியின் மனைவியாக நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்க உள்ளதாக கொச்சுண்ணி நிவின் பாலி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

காயம்குளம் கொச்சுண்ணியில் இணைந்த மோகன்லால்