Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் வெளியீடு தேதி

kaala movie released on tamil new year

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி' படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் பா ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. இதில் சூப்பர் ஸ்டார் கடைசியாக தனது டப்பிங் பணியை முடித்தார்.

தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படம் ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் '2.0' தள்ளி போக அதிக அளவு வாய்ப்புள்ளது. இதனால் காலா திரைப்படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, சம்பத், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு திரை பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் டீசர் ட்ரைலர் போன்றவை வெளியாவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் வெளியீடு தேதி