க்யூபுக்கு பதில் ஏரோக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்
வேலுசாமி (Author) Published Date : Apr 10, 2018 12:00 ISTபொழுதுபோக்கு
டிஜிட்டல் நிறுவனங்கள் மற்றும் தியேட்டர் கட்டணம் போன்றவற்றை எதிர்த்து ஒரு மாதத்திற்கும் மேலாக தயாரிப்பாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தியேட்டர் பக்கமே ரசிகர்கள் கூட்டம் திரும்பி பார்ப்பதில்லை. ஆனாலும் போராட்டத்திற்கு முன்னதாகே வெளியான நாச்சியார், கலகலப்பு போன்ற படங்களும், தமிழிலும் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இதனால் ஒரு சில மக்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் வருகின்றனர். ஆனாலும் போதிய கூட்டம் இல்லாததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முன்னதாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்க தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். இதனால் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க போராட்டம் நடைபெறும் என்று விஷால் அறிவித்தார். இந்நிலையில் தற்போது கியூப் நிறுவனத்திற்கு அப்பு வைக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் 'ஏரோக்ஸ் (AEROX)' என்ற புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.