சர்ச்சையில் சிக்கிய தானா சேர்ந்த கூட்டம்
விக்னேஷ் (Author) Published Date : Jan 06, 2018 18:30 ISTபொழுதுபோக்கு
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து ஆறுமுக குமார் இயக்கத்தில் இன்னும் வெளிவராத விஜய் சேதுபதியின் பல மாறுபட்ட தோற்றத்தில் களமிறங்கியுள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றே' படத்தில் வெளிவந்த டீசரில் விஜய் சேதுபதியின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்பொழுது படங்களின் மீதான சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இது வரை வெளிவந்த படத்தின் டீசர், போஸ்டர், இசை போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு இன்றளவும் வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள 'அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது' என்ற வரிக்கு கண்டனம் தெரிவித்து இப்பாடலை தடை செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதிஷ் குமார் புகார் அளித்துள்ளார்.
இதனை பார்த்த காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, படத்தின் ப்ரோமோஷனுக்காக எந்த பிரச்சனையும் செய்து உதவி செய்ய வேண்டாம். தற்பொழுது பஸ் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு முதலில் உதவி செய்யுங்கள் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.