Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அஜித்துடன் இணைந்து இரட்டை வேடத்தில் கலக்கும் தம்பி ராமைய்யா

அண்ணன் தம்பியாக அஜித் இரு வேடத்தில் நடித்து வரும் நிலையில் தம்பி ராமையாவும் இரு வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'விசுவாசம்'. அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து விவேக், ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா, யோகிபாபு, கலைராணி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் அஜித் குமார், அண்ணன் தம்பி என இரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தம்பி ராமையாவும் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐதராபாத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் முதன் முறையாக இணைந்து இமான் இசையமைத்து வரும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பொங்கலுக்கு வெளிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது. 

அஜித்துடன் இணைந்து இரட்டை வேடத்தில் கலக்கும் தம்பி ராமைய்யா