ஆர்.கே.சுரேஷ் ரீமேக் படத்தில் இணையும் வரலட்சுமி
ராசு (Author) Published Date : Dec 28, 2017 13:33 ISTபொழுதுபோக்கு
'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஆர்கே.சுரேஷ், இதனை தொடர்ந்து தர்ம துரை, ஹர ஹர மகாதேவகி, இப்படை வெல்லும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக முன்னனி நடிகர்களின் ஒருவரான விக்ரம் நடிப்பில் வெளிவர உள்ள 'ஸ்கெட்ச் ' படத்தில் தற்பொழுது வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நாயகனாக தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் ஆனந்த் ரவி இயக்கி நடித்திருந்த 'நெப்போலியன்' படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ‘ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றியுள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் மாதத்தில் வெளிவந்து தெலுங்கு திரையுலகில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் செய்வதற்கான உரிமையை ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றியதோடு படத்தில் நாயகனாகவும் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் பேசப்படும் கதாபாத்திரத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் படத்தின் சில தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் முக்கிய வேடத்திற்காக பாலிவுட் திரையின் முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆர்.கே.சுரேஷுக்கு ஜோடியாக 'தாரை தப்பட்டை' நாயகி வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இவர்கள் 'தாரை தப்பட்டை' படத்திற்கு பிறகு மீண்டும் இணையவிருக்கின்றனர். மேலும் படத்தின் இயக்குனர், மற்ற நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தின் படப்பிடிப்பு என அனைத்து வித தகவலையும் விரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.