Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'வேலைக்காரன்' படத்தின் ப்ரோமோ வீடியோ

velaikkaran movie promo video

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வேலைக்காரன்'. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வேலைக்காரன் படத்தின் பாடல்கள் வெளியாகி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 22-இல் கிறிஸ்துமஸ் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேரலையாக ரசிகர்களுக்கு நேற்று காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது வேலைக்காரன் படத்தின் ப்ரோமோ விடீயோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

'வேலைக்காரன்' படத்தின் ப்ரோமோ வீடியோ