ஜி.எஸ்.டி அடுத்து விவசாயத்திற்கு கைகொடுக்கும் விஜய் !
யசோதா (Author) Published Date : Nov 17, 2017 16:50 ISTபொழுதுபோக்கு
ஏஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து விஜய்யின் 62வது படத்தினையும் இயக்கவுள்ளார். முருகதாஸ் இயக்கும் படங்கள் அனைத்தும் சமூக நோக்கத்தின் அடிப்படையில் இருக்கும். இந்நிலையில் விஜயின் 62வது படமும் சமுதாயத்தின் அடிப்படையில் புது விதமான மாறுபட்ட தோற்றத்தில் எடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
மெர்சல் படத்தின் மூலம் அரசின் ஜி.எஸ்.டி மற்றும் இலவச மருத்துவம் பற்றிய விவரங்களை எடுத்துரைத்த விஜய், இதனை தொடர்ந்து இந்தியாவில் தமிழக மக்களின் முக்கிய தூணான விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை பேசவுள்ளாராம். மேலும் சமீபகாலமாக தமிழக விவசாயிகள் மத்தியில் எரிமலை போன்று வெடித்து வரும் 'ஹைட்ரோ கார்பன் போராட்டம்' உள்ளிட்ட சில விவசாயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல வசனங்கள் விஜயின் 62வது படத்தில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
கத்தி படத்தினை போன்று இரு வேடத்தில் நடிக்க இருக்கும் விஜய், மாற்று திறனாளியாகவும் விவசாயியாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. அந்த வகையில் சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள ஒரு இளைஞன் வெளிப்படுத்தும் கோபத்தின் அடிப்படைதான் கதையின் கருத்தாம்.