Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்

irumugan director new movie

இயக்குனர் ஆனந்த் சங்கர் ‘அரிமா நம்பி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கியுள்ளார். இரு வித்தியாசமான மாறுபட்ட  கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கும் இந்த படத்தில், நயன்தாரா, தம்பி ராமையா, நித்யாமேனன், நாசர்  உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் வணிக வாரியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படம்  குறித்த அறிவிப்பை இன்று வெளியாகும் என்று தெரிவித்தனர். 

இதனை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இயக்குனர் ஆனந்த் சங்கரின்  புதிய படத்தின் கதாநாயகன் பற்றிய தகவலை சஸ்பென்சாக வைத்திருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.  இந்த தகவலுக்கு ஏராளமானோர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று காலையில் இது குறித்த அறிவிப்பை தெரிவித்துள்ளனர். தெலுங்கு திரையுலகில் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகனாக நடித்த விஜய் தேர்கொண்டா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். 

இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்